குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கமல்: மக்களவை தேர்தலில் போட்டியிடுவது உறுதி; இந்த கட்சியுடன் தான் கூட்டணியா?
சென்னையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி போட்டியிடுவது உறுதி என்றும், எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்தும் பேட்டியளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் மேலும், எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் விரிவான ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன்:
நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி தற்போது சொல்ல முடியாது. தமிழகத்தின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்படும். தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லை. அது உறுதி. மாறாக, ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம்.
Kamal Haasan: I will definitely contest in the upcoming Lok Sabha elections. pic.twitter.com/jU9RyA1oTw
— ANI (@ANI) December 22, 2018
கூட்டணியில் யார் தலைவர் என்பதை இப்போது எனக்கு சொல்ல தெரியவில்லை. கூட்டணியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை நிர்வாகிகள் எனக்கு வழங்கியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் பொறுப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பை மகேந்திரன் தொடங்குவார்.
மக்கள் நீதி மய்யத்தில் எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பதை ஜனவரி 31ம் தேதி அறிவிப்பேன். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் அதில் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார். விரைவில் கட்சிக்கூட்டணி பற்றி கமல் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.