விபத்தை பார்வையிட செல்வபருக்கு கூலிங் கிளாஸ் தேவையா?.. அமைச்சர் உதயநிதியை கடுமையாக சாடிய ஜெயக்குமார்..!



Minister Udhayanidhi Stalin Trolls by Former Minister AIADMK Jayakumar 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ், கர்நாடகாவின் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி பயணித்த துரந்தோ எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் ஆகியவை ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது.  

இந்த விபத்தில் இரயிலில் பயணம் செய்த 288 பயணிகள் பலியாகினர். 900 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் தமிழர்களின் நிலையை தெரிந்துகொள்ள அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் ஒடிசா விரைந்தனர். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அணிந்து சென்றார். இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் விமர்சித்துள்ளார். 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறுகையில், "நாடே மீளாத்துயரில் ஆழ்ந்து இருக்கிறது. கண்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நமது கண்களை மூடவிடாமல் செய்கிறது. காதுகளில் மரண ஓலம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. 

இவ்வுளவு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் ஆய்வுக்கு செல்லும் உதயநிதி கூலிங் கிளாஸ் அவசியமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.