#Breaking: கல்விக்கொள்கை விவகாரம்.. திமுக உறுப்பினர்கள் தொடர் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.!



Parliament Session Adjourned till 12 PM Today 

 

மக்களவை கூட்டத்தொடரில், இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கை விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி நேரத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பி.எம் ஸ்ரீ கல்வி திட்டம் விவகாரத்தில், மத்திய அரசின் திட்டத்தை நிராகரிக்கும் சூப்பர் முதல்வர் தமிழ்நாட்டில் யார்? என மத்திய மைச்சார் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: 'நாங்க ஏன் நடு ராத்திரியில் சுடுகாட்டுக்கு போகணும்? 'அதிமேதாவி' களுக்கு பதிலடி - ஸ்டாலின்.! 

அவரின் கேள்வி மீது, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதிலை அளித்து வந்தார். மேலும், பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என முதலில் கேட்ட தமிழச்சி, இன்று அதனை எதிர்ப்பது ஏன்? தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் திமுக விளையாடுகிறது என பேசினார்.

இந்நிலையில், திமுகவினரின் தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்ற மக்களவை ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் அமளி காரணமாக மக்களவை 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஒவ்வொரு மாதமும் ₹.3000 உதவித்தொகை.. தேர்தலுக்காக திமுக போட்ட பலே திட்டம்.!