'நாங்க ஏன் நடு ராத்திரியில் சுடுகாட்டுக்கு போகணும்? 'அதிமேதாவி' களுக்கு பதிலடி - ஸ்டாலின்.! 



stalin speech about hindi issue and destroying name in boards

இந்தி எதிர்ப்புக்கான அற போராட்டங்கள், சட்ட போராட்டங்கள் என அனைத்தும் தமிழகத்தில் காலம் காலமாக நடந்து வரும் ஒன்று தான். சமீப காலமாக சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுகவினர் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்று இருக்கும் பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை பெயிண்ட் போன்ற பொருட்களை கொண்டு அழித்து வருகின்றனர். 

சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிய பொழுது, "நிறைய பேர் ரயில் நிலையத்தில் இருக்கும் இந்தி எழுத்துக்களை அழிக்கிறீர்களே அதுபோல பணத்தில் எழுதியுள்ள இந்தி எழுத்துக்களையும் அழிக்க வேண்டியது தானே? என்று அதிமேதாவிதனமாக கேள்வி கேட்கின்றனர். 

dmk

நாங்க ஏன் நடு ராத்திரியில் சுடுகாட்டுக்கு போக வேண்டும்? ரூபாய் நோட்டில் உள்ள எழுத்துக்கள் மொழி சமத்துவத்தை பேணுவது. ஆனால், ஒன்றிய அரசின் மற்ற துறைகளிலும், ரயில்வே துறைகளிலும் மொழி சமத்துவத்தையா வலியுறுத்துகிறது? 

இதையும் படிங்க: ஒவ்வொரு மாதமும் ₹.3000 உதவித்தொகை.. தேர்தலுக்காக திமுக போட்ட பலே திட்டம்.! 

அங்கு நடப்பது மொழி திணிப்பு. மேலும், ரூபாய் நோட்டுகளில் இந்தி மொழி மட்டுமா இடம்பெற்று இருக்கிறது? இந்தியாவின் பல்வேறு மொழிகளும் இடம் பெற்று உள்ளது. இதெல்லாம் தெரியாமல் அதிக பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கின்றனர்." என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கே கண்டிஷன் போட்ட காளியம்மாள்.. டீல் ஓகே ஆச்சா? இல்லையா.?!