மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: விஜயகாந்தை தொடர்ந்து, பிரபல அரசியல் கட்சி தலைவர் மருத்துவமனையில் அனுமதி.! தொடரும் சோகம்.!!
புதிய தமிழகம் கட்சியின் தலைவராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணசாமி. தென்மாவட்ட அரசியலில் முக்கிய தலைவராகவும் இவர் இருந்து வருகிறார்.
சமீபத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தது.
அக்கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமியும் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வந்தார். இந்த பணிகளுக்காக அவர் நெல்லையில் முகாமிட்டார்.
இந்த நிலையில், அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று சோதனைக்கு மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.