பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட கொடுமையே, இது என்னடா புது குழப்பமாக இருக்கு, ராகுலை வச்சு செய்யும் பாஜக.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ராமன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில் இங்கு 50 லட்சம் மக்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் கடந்த ஜூலை, 26ம் தேதி துவங்கியது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநிலம் சென்று இருந்தார்.
அங்கு அவர் பேசுகையில் '' பாஜக இலவசமாக கொடுக்கும் மொபைல் போன்களை, பொதுத்துறை நிறுவனமான, பி.எச்.இ.எல்., நிறுவனத்திடம் இருந்து பெறப்படவில்லை. ஏற்கனவே, ரபேல் போர் விமான ஊழல் நடந்துள்ளது. இப்போது மொபைல் போன் ஊழல் நடந்துள்ளது,'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இதனை கேலி செய்யும் விதமாக பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., மொபைல் போன்களை தயாரிப்பது இல்லை.
பி.எஸ்.என்.எல் தான் நிறுவனம் மொபைல் போனுடன் தொடர்புடையது. இதுகூட தெரியாமல் ராகுல் குழப்பமாக பேசுகிறார் என்று பா.ஜ.,வினர் கிண்டலடித்து டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
காங்கிரசாரோ ராகுல், பி.இ.எல்., நிறுவனத்தை தான் குறிப்பிட்டார் என விளக்கம் அளிக்க அதற்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ற பி.இ.எல்., நிறுவனம் விமான உதிரிபாகங்களை தயாரித்து வருகிறது அதற்கும் மொபைல் போனுக்கும் என்ன சம்பந்தம் என பா.ஜ.,வினர் கேலி செய்துள்ளனர் .