மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#LokSabha2024 | பாஜக கூட்டணியில் பரபரப்பு.!! திடீரென விலகிய மூத்த தலைவர்.!!
2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தங்களது வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய கூட்டணி கட்சிகளில் ஒன்றான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியிலிருந்து அதன் மூத்த தலைவர் திடீரென விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் தனி கட்சியாக பாஜக 370 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் மூத்த தலைவரான ஷாஹித் சித்திக் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கட்சியில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டங்களின் மீது மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அரசு இயந்திரங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கிறது. மக்கள் நலன் நாட்டின் நலன் மற்றும் ஜனநாயக நலனை கருத்தில் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியிலிருந்து விலகுவதாக ஷாஹித் சித்திக் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிக் கட்சியின் முக்கிய தலைவர் விலகியிருப்பது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.