மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: முன்னாள் டிஜிபி காங்கிரசில் இணைகிறார்; டெல்லி பயணத்தின் காரணம் இதுதான்.. தமிழ்நாடு அரசியலில் அடுத்த சரவெடி.!
தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபியாக பணியாற்றி, அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரி பி.கே ரவி.
இவர் தமிழ்நாடு தீயணைப்புத்துறை டிஜிபியாக பணியாற்றி இருந்தார். மின்சாரத்துறை, விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற பி.கே ரவி, காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் இணைகிறார்.
இவர் அதற்காக டெல்லி பயணமும் மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.
பாஜக தலைமை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலையை அரசியலுக்கு அழைத்து வந்த நிலையில், அதனைத்தொடர்ந்து காங்கிரசும் முக்கியப்புள்ளியை களமிறக்கியுள்ளது.
அரசியல் களத்தில் சீனியர் - ஜூனியர் காவல் அதிகாரிகள் எப்படி செயல்படப்போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.
Thanks: Way2News