கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வைரலாகும் தல தோனியின் மகள் ஷிவா நடனம்; சூப்பர் ஹிட் தமிழ் பாடல்.!
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 11 சீசன் நிறைவடைந்து தற்போது 12 வது சீசன் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 5வது போட்டியாக இன்று சென்னை சூப்பர் கிங்ஸும் டெல்லி கேப்பிடல் அணியும் இரவு 8 மணிக்கு மோதுகின்றன.
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியை நேரில் காண தல தோனியின் மனைவி சாக்ஷியும் அவரது மகள் ஷிவாவும் மைதானத்திற்கு வந்திருந்தனர். அப்போது மைதானத்தில் ஒளிபரப்பான ஒத்த சொல்லால என்ற தமிழ் பாடலுக்கு ஷிவா உற்சாகமாக நடனம் ஆடினார். தற்போது அவர் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thala #Dhoni daughter Ziva grooving for
— ᑕᕼEᑎᑎᗩI Gᐯᑭ ᖴᑕ (@chennaigvpfc) March 25, 2019
#gvprakash 's otha sollaala 💃💃💃💃💃💃
#WhistlePodu @gvprakash #CSK pic.twitter.com/QfV5k3AhwA
ஒத்த சொல்லால என்ற பாடல் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஹிட்டான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.