#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் முறையாக வெளியான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரின் பெற்றோர் புகைப்படம்!
தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்து வருபவர் யுவேந்த்ர சாஹல். இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருக்கும் சாஹல் தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த சாஹல் இளம் வயதில் ஒரு செஸ் வீரராக இருந்தார். பின்னர் கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் சுழற்பந்து வீச்சாளராக பயிற்சி பெற்று இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்துள்ளார். இவர் இந்தியாவிற்காக சர்வதேச அளவில் இளம்வயதில் செஸ் ஆடியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடிய சாஹல் பின்னர் தனது திறமையால் 2016ஆம் ஆண்டில் இந்திய அணியில் இடம் பிடித்தார். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
உலகக் கோப்பையில் ஆடும் தனது மகனை உற்சாகப்படுத்த சாகலின் பெற்றோர் இங்கிலாந்திற்கு சென்றுள்ளனர். அப்போது தனது பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Mom DaD ❤️❤️ pic.twitter.com/6ox8s55ddh
— Yuzvendra Chahal (@yuzi_chahal) July 1, 2019