உலககோப்பையில் நான்காவது இடத்திற்கான வீரர் பற்றி கங்குலி ஆலோசனை - கனவு பலிக்குமா!



Ganguly suggests pujara for 4th place

இந்திய அணி ஒருநாள் போட்டியில் நான்காவது இடத்தில் இறங்க 7 முதல் 8 வீரர்களை கொண்டு சோதனை செய்துவிட்டது. ஆனால் அந்த இடத்திற்கு இதுவரை யாரையும் உறுதிசெய்ய முடியவில்லை. 

உலககோப்பை நெருங்கி விட்ட நிலையில், இந்த இடத்திற்கான வீரரை தேர்வு செய்வதில் இந்திய அணிக்கு மிகுந்த நெருக்கடி தான் நிலவி வருகிறது. ரஹானே, ராயுடு,   தோனி, கோலி, விஜய் சங்கர், கேஎல் ராகுல் என பல்வேறு வீரர்களை வைத்து சோதனை செய்தும் எந்த பயனும் அளிக்கவில்லை. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தாதா கங்குலி புதிய திட்டம் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறும் வீரரை அந்த இடத்தில் திடீரென இறக்க அணி நிர்வாகம் முன்வருமா என்பது கேள்விக்குறி தான். அப்படி யாரைத் தான் கங்குலி கூறுகிறார் என்று பார்த்தால் அது புஜாரா தான். டெஸ்ட் போட்டியில் 3 ஆவது இடத்தில் இறங்கி இந்திய அணிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் புஜாரா. ஆனால் இவர் 5 ஒருநாள் போட்டிகளில் மட்டும் தான் ஆடியுள்ளார். 

cricket

புஜாராவை பற்ற கங்குலி பேசுகையில், "நான் சொல்வதை யாராலும் நம்ப முடியாது மற்றும் சிலருக்கு சிரிப்பு கூட வரலாம். இருந்தாலும் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 4ஆவது வீரராக களமிறங்க புஜாரா தான் சரியாக இருப்பார். அவரது பீல்டிங் சற்று மோசமாக இருந்தாலும் அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். பலருக்கு இது நகைப்பாக இருந்தாலும், இதுவரை சோதனை செய்த வீரர்களை விட புஜாரா அந்த இடத்திற்கு சிறந்தவர் தான். 

ஒரு காலகட்டத்தில் இந்திய அணிக்கு சுவராக இருந்த டிராவிட்டின் இடத்தை புஜாராவால் நிச்சயம் நிரப்ப முடியும். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் தான். இதில் பலருக்கு உடன்பாடு இருக்காது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவ்வப்போது இதுபோன்ற திடீர் முடிவுகளை எடுப்பதும் நல்ல பலனைத் தரும்" எனக் கூறியுள்ளார்.