#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் அதிரடி காட்டிய ஷபாலி வர்மா.. இலங்கையை பந்தாடிய இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் t20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கை மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஏற்கனவே நடைபெற்ற 3 லீக் போட்டிகளிலும் வென்ற இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்குள் முன்னேறியது. இன்று லீக் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் ராதா யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா மற்றும் மந்தனா வழக்கம்போல அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். மந்தனா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவுர் 15 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிய ஷபாலி வர்மா 47 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய ஜெமிமாஹ் மற்றும் தீப்தி சர்மா தலா 15 ரன்கள் எடுக்க இந்திய அணி 14.4 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராதா யாதவ் ஆதிநாயகி விருதினை பெற்றார். லீக் சுற்றில் அணைத்து போட்டிகளில் வென்று இந்திய அணி மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் B பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் அணியுடன் விளையாட உள்ளது.