தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் வீரர்களை மிஞ்சிய மகளிர் அணி! உலகத்தையே திரும்பி பார்கவைத்து கெத்து காட்டும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் டாப்-2 இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் குரூப் ஏ அணியில் இடம்பெற்றிருந்த இந்திய மகளிர் 4 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்தநிலையில் சிட்னியில் இன்று காலை நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
அதேபோல் இன்று பிற்பகலில் நடைபெறும் இரண்டாம் அறையிறுதி போட்டியில் 4 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.
☔ MATCH ABANDONED ☔
— T20 World Cup (@T20WorldCup) March 5, 2020
For the first time in their history, India have qualified for the Women's #T20WorldCup final 🇮🇳 pic.twitter.com/88DHzqTbnK
இந்த நிலையில், சிட்னியில் இன்று முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோத இருந்த நிலையில், சிட்னியில் கனமழை பெய்ததால், ஆட்டம் டாஸ் போடப்படாமலேயே கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.