#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இப்படி சிக்ஸர் அடிக்கிற மனுஷன ஏன்யா ஒதுக்கி வச்சீங்க.!! சிஎஸ்கே பயிற்சியில் பந்தை பறக்கவிடும் புது பிளேயர்..
வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் சென்னை அணி வீரர் புஜாரா சிக்ஸர்களை பறக்கவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஐபில் சீசன் 14 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபில் போட்டியில் சொதப்பிய சென்னை அணி இந்த முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறக்க உள்ளது. இதற்காக தொடருக்கு முன்னதாகவே பயிற்சியை துவங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த வலைப்பயிற்சியின் போது சென்னை அணியில் தேர்வாகியுள்ள இந்திய வீரர் புஜாரா சிக்ஸர்களை பறக்க விட்டார். 2014ம் ஆண்டு நடந்த ஐபில் போட்டிக்கு பிறகு எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. தற்போது இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடிவரும் புஜாராவை சென்னை அணி அடிப்படை விலையான 20 லட்சம் கொடுத்து எடுத்துள்ளது.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஐபில் போட்டியில் களமிறக்க இருக்கும் புஜாரா தற்போது வலைப்பயிற்சியில் சிக்ஸர்களை பறக்கவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
Puji was on fire 🔥@cheteshwar1 #csk pic.twitter.com/CNbPXi786q
— Ravi Desai 🇮🇳 Champion CSK 💛🏆 (@its_DRP) March 30, 2021