திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விராட் கோலி மாட்டு இறைச்சி சாப்பிட்டாரா? வைரலான பில் போட்டோவின் உண்மைத்தன்மை இதுதான்..!
கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்து வந்த விராட் கோலியும், இந்திய திரைப்பட முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரெஸ்டாரண்டில் தம்பதிகள் இருவரும் உணவு சாப்பிட்டதாகவும், அப்போது அவர்கள் மாட்டு இறைச்சி சார்ந்த உணவை சாப்பிட்டதாகவும் பில் தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.
இது இந்துத்துவ ஆதரவாளர்களிடையே எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், உண்மையில் இந்த பில் இவர்கள் சாப்பிட்டது தானா? அல்லது வேண்டுமென்றே வைரல் செய்யப்பட்டுள்ளதா? என்பது தொடர்பான விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில் இந்த பில் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற போலியான தகவல்களை பரப்புவோர் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.