கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தேர்தல் குறித்து தல தோனியின் மகள் கூறிய அட்வைஸ்! ஆச்சரியமடைந்த ரசிகர்கள்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தல தோனி தனது குடும்பத்துடன், சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று வாக்களித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைவரும் வாக்களிக்கவேண்டும் என பிரபல நட்சத்திரங்கள் கூறிவந்தனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட நாம் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக கடமை.
இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், சென்னை அணியின் கேப்டனுமான டோனி, தன்னுடைய குடும்பத்துடன் சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று ஜவஹர் வித்யா மந்திர் வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவிட்டுள்ளார்.
Yes, you heard it right from the Super Cub! Your vote is your right. Don't miss out on the opportunity of choosing your leader! @msdhoni #WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/mTE86ncAxH
— Chennai Super Kings (@ChennaiIPL) 6 May 2019
இதனையடுத்து தல தோனி தன்னுடைய மகள் ஷிவாவுடன் இருக்கும் ஒரு வீடியோ ஒன்றினை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'என்னுடைய அப்பாவை போல அனைவரும் உங்களுடைய வாக்குகளை பயன்படுத்துங்கள்' என ஷிவா கூறியுள்ளார். ஷிவா ஜனநாயக கடமையை அணைவரும் நிலைநாட்டவேண்டும் என கூறியது அணைத்து ரசிகர்களையும் ஆச்சரியபட வைத்தது.