மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த அடுத்தடுத்து சர்ப்ரைஸ்.! உச்சகட்ட குஷியில் வீரர்கள்.!



mukesh ambani surprised mumbai indians players

2022 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. 15-வது ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்குவதால் 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு அணியின் உரிமையளர் முகேஷ் அம்பானி சார்பில் அடுத்தடுத்து சர்ப்ரைஸ் தரப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு பயோ பபுள் சூழலில் மன தொய்வு ஏற்படுவதை தடுக்க, முழுக்க முழுக்க ஹோட்டலுக்கு வெளியவே பொழுதை கழிக்கும் அளவுக்கு ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அம்பானி. திறந்தவெளியில் பெரிய திரையில் டிவி பார்ப்பது, உணவு அருந்த தனி இடம், விளையாடுவதற்கு திறந்தவெளியில் ஆடுகளம் ஆகியவை அமைத்து தரப்பட்டுள்ளது.

இதே போன்று Battleground என்ற புதிய விளையாட்டு களமும் வீரர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்கள் விளையாட்டு துப்பாக்கியை வைத்து ராணுவ வீரர்கள் போல் தவழ்ந்து, ஏகிறி குதித்து விளையாடலாம். மேலும், பயோ பபுள் காரணமாக வெளியே செல்ல முடியாது என்பதால் ஹோட்டலுக்கு வெளியவே திறந்தவெளியில் கோல்ஃப் மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.