பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்தியாவில் நடைபெறவிருந்த U-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள்! FIFA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரஸால் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில் இந்தியாவில் நவம்பர் 2 முதல் 21 ஆம் தேதி வரை 17-வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவிருந்தது. மேலும் இந்தப் போட்டிகள் கொல்கத்தா, குவுகாத்தி,புவனேஷ்வர், அகமதாபாத், நவி மும்பை உள்ளிட்ட 5 நகரங்களில் நடைபெறவிருந்தது.
ஆனால் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடும் நிலையில் இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதிற்குட்பட்ட உலக கோப்பை கால்பந்துபோட்டி தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) அறிவித்துள்ளது. மேலும் போட்டிகள் நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பிபா தெரிவித்துள்ளது.