#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி! மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த உலக கோப்பை தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகளில் இதுவரை ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ள அணிகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான். இன்றைய போட்டியிலாவது ஒரு அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுவிடும் என தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் ஒருவித ஆசையில் இருந்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் கார்டிபில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வழக்கம் போல மழை குறுக்கிட ஆரம்பித்தது. ஆறாவது ஓவரின் முடிவில் ஆட்டம் 10 நிமிடங்களுக்கு மேல் மழையால் தடைபட்டது. அப்போது லேசான தூறல் மட்டுமே விழுந்தது.
பின்னர் மீண்டும் துவங்கப்பட்ட ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது பந்துவீச்சை திறமையை நிரூபிக்க துவங்கியது. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி மிகவும் மெதுவாக ஆடத்தொடங்கியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட துவங்கியது. இந்த முறை மழையானது சற்று கனமாக பெய்து வருகிறது. இதனால் ஆட்டம் மீண்டும் துவங்க நீண்ட நேரம் ஆகும் என தெரியவருகிறது. ஒருவேளை ஆட்டம் நடைபெறாமல் போனால் இன்றைக்கும் வெற்றி பெறும் வாய்ப்பினை இரு அணிகளுமே இழந்துவிடும்.
ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது கிடைத்த ஒரே ஒரு புள்ளியுடன் தான் தென்ஆப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளது.