வங்கதேச அணியிடம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்?



reason for india lose


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது, இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் வங்கதேச அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது 19-வது ஓவர் தான், அந்த ஓவரை வீசிய கலீல் அகமது நான்கு பவுண்டரிகள் விட்டுக் கொடுத்தார். இதனால் ரசிகர்கள் அவர் மீது ஆதங்கமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ஆட்டத்தின் 10-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சஹால் வீசினார். அதை எதிர்கொண்ட முஸ்தபிசுர் ரஹீம் பந்தை காலில் வாங்கியதால், பந்து வீச்சாளர் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை, ஆனால் ரீப்ளேவில் அது அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. இதனால் ரோகித் ஏமாற்றமடைந்தார். 

மேலும், சஹால் வீசிய பந்தில் சவுமியா சர்கார் காலில் பட்டு எல்.பி.டபில்யூ கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் இல்லை என்று கூற, ரோஹித் ரிவ்யூ எடுத்தார். ஆனால் அது ரீப்ளேயில் அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. இந்திய அணி தோற்றதற்கு இதுவும் காரணம் என கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.