துவங்குகிறது டெஸ்ட் கிரிக்கெட் உலககோப்பை தொடர்! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்



test cricket worldcup begins august

கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்பப் புள்ளியே டெஸ்ட் கிரிக்கெட் தான். ஆனால் அதற்குப் பின்பு வந்த ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு உலகக்கோப்பை தொடர்கள் நடத்தப்படுகின்றன. பலமுறை முயற்சி செய்தும் டெஸ்ட் சாம்பியன் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. தற்பொழுது இந்த தொடரானது அனைவரின் ஒத்துழைப்புடன் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூலம் துவங்குகிறது.

இந்த டெஸ்ட் உலகக்கோப்பை தொடரானது மற்ற ஐசிசி தொடர்களை போன்று ஒரே சமயத்தில் நடைபெறப் போவதில்லை. அடுத்த மாதம் துவங்கும் இந்த டெஸ்ட் தொடர் ஆனது 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் தொடரில் கலந்து கொள்ளும் ஒன்பது அணிகளும் மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளன. அதில் 3 சொந்த மண்ணிலும் மற்ற 3 டெஸ்ட் தொடர்கள் அயல்நாட்டிலும் நடைபெறும். 

worldcup test cricket

ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் இரண்டு முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து தொடரிலும் ஒரே அளவிலான போட்டிகள் நடைபெறப் போவதில்லை. ஆனால் ஒரு டெஸ்ட் தொடருக்கு 120 புள்ளிகள் மொத்தம் ஒதுக்கப்படுகிறது. அதில் எத்தனை டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் புள்ளிகள் ஒதுக்கப்படும். 

ஒருவேளை ஒரு டெஸ்ட் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றால் ஒவ்வொரு போட்டிக்கும் 40 புள்ளிகள் ஒதுக்கப்படும். அதில் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகள் கிடைக்கும். ஆட்டம் டையில் முடிந்தால் ஒரு அணிக்கு 20 புள்ளிகள். ஆட்டம் டிராவில் முடிந்தால் 13.3 புள்ளிகள் இரு அணிகளுக்கும் ஒதுக்கப்படும். மூன்றில் இரண்டு பங்கு புள்ளிகள் இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். ஒரு தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மாட்டும் நடைபெற்றால் 2 போட்டிகளுக்கும் தலா 60 புள்ளிகள் ஒதுக்கப்படும்.

worldcup test cricket

இந்த உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி துவங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்து துவங்கப்படுகிறது. இந்திய அணி தனது முதல் சாம்பியன் டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதே போன்று 9 அணிகளும் மற்ற 6 அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளப் போகிறது. 2021 ஆம் ஆண்டில் எந்த இரு அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கிறதோ அந்த அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2021 ஜூன் மாதம் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இந்த மாபெரும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும். ஒருவேளை இந்த போட்டியானது டிரா அல்லது டையில் முடிந்தால் புள்ளி பட்டியலில் எந்த அணி முதலிடத்தில் உள்ளதோ அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.