தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு ஓய்வினை அறிவிக்கவுள்ள ஐந்து பிரபல கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய அணியில் அடுத்தடுத்து இளம் வீரர்களின் வருகையால் சீனியர் வீரர்களுக்கு வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன. இது இந்திய அணியில் மட்டும் இல்லாமல் அணைத்து நாட்டு அணிக்கும் அதே நிலைமைதான். அவ்வாறு புறக்கணிக்கப்படும் வீரர்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஓய்வினை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது. அவர்களில் சிலர் பெயர்கள் இதோ.
1 யுவராஜ் சிங்:
கடந்த சில வருடங்கள் முன்பு வரை இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்த யுவராஜ் சிங் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்று அந்த தொடரில் இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் யுவராஜ் சிங் கைகொடுத்திருந்தாலும், இவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் இருப்பது காலத்தின் கட்டாயமே.
2 லசீத் மலிங்கா:
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தொடர்ந்து மூன்று வருடங்கலாகா இலங்கை அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அடுத்தவருடம் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இவர் தனது ஓய்வினை அறிவிப்பார் யானா எதிர்பார்க்க படுகிறது.
3 ஹர்பஜன் சிங்:
குல்தீப் யாதவ், சாஹல் போன்ற இளம் சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையும் அவர்களின் அபார பந்துவீசும் திறமையாலும் அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்களால் கூட இந்திய அணியில் இடெம்பெற முடியாத நிலையில் ஹர்பஜன் சிங்க் இனி இனித்திய அணியில் இடெம்பெறுவதென்பது மிகவும் கடினமான ஓன்று.
4 முகமது ஹபீஸ்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலை சிறந்த ஆல் ரவுண்டருமாக திகழ்ந்த முகமது ஹபீஸ் நீண்ட காலமாகவே பாகிஸ்தான் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகிறார். அணியில் இவருக்கான வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கான மரியாதை காலம் செல்ல செல்ல குறைந்து கொண்டே செல்வதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், இதனால் ஹபீஸே கடும் மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது. இவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவார் என்று தெரிகிறது.
5 மோர்டசா:
வஙக்தேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்த மோர்டசா கடந்த பல மாதங்களாவே வங்கதேச அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். காத்திருந்து காத்திருந்து வெறுத்து போய் உள்ள இவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு ஓய்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.