மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எங்களுக்கு டாஸ் முக்கியமில்லைனு சொன்னிங்களே... பேயாட்டம் ஆடிய வில்லியம்சன்.!
7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் முன்னிலை பிலிற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இதனையடுத்து துபாய் கிரிக்கெட் மைதானத்தில் T20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக மார்ட்டின் கப்டில் மற்றும் டேரில் மிட்செல் களமிறங்கினர். ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் டேரில் மிட்செல் 11 ரன்கள் எடுத்தநிலையில் கேட்சாகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து மற்றொரு துவக்க வீரர் மார்ட்டின் கப்டில் 28 ரன்கள் எடுத்தநிலையில் ஆடம் சாம்பா ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய பிலிப்ஸ் சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களை திணறவைத்தனர். அதிரடியாக ஆடிய கேன் வில்லியம்சன் 48 பந்துகளுக்கு 85 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.