மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திக் திக் கடைசி நிமிடம், இறுதி ஓவர் குறித்து பென் ஸ்டோக்ஸ் உருக்கமான பேச்சு.!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. சூப்பர் ஓவரும் டையில் முடிந்தும் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.
மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியின் இறுதி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளிலும் ரன் ஏதும் எடுக்காத நிலையில் மீதமுள்ள 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது பந்தை ஸ்டோக்ஸ் சிக்சருக்கு விளாசினார். இதனால் மீதமுள்ள 3 பந்துகளில் 9 ரன்கள் என்ற நிலை உருவானது.
தொடர்ந்து 4வது பந்தை சந்தித்த ஸ்டோக்ஸ் பந்தை அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முற்பட்ட போது மார்ட்டின் கப்தில் வீசிய ஓவர் த்ரோவானது ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்தானது எல்லைக் கோட்டைக் கடந்து. இதனால் அவர்கள் ஓடிய 2 ரன்கள் மற்றும் பவுண்டரிகள் மூலம் மொத்தம் 6 ரன்கள் இங்கிலாந்துக்கு கிடைத்தது. இதனால் வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் எளிதானது.
மீதமுள்ள 2 பந்துகளில் 2 ரன்கள் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதன் பிறகு நடந்த சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் என்ற அடிப்படையில் வெற்றியை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறும்போது:
நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பானது. எல்லோருடைய ஒட்டுமொத்த கடின உழைப்பும் எங்களை சாம்பியன் ஆக்கியுள்ளது. எங்களுக்குத்தான் உலகக் கோப்பை என்று நட்சத்திரங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளதோ என்று நினைக்கிறேன். ஓவர் த்ரோ மூலம் கிடைத்த 6 ரன்களுக்காக மீதமுள்ள என் வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன் என்று உருக்கமாக தெரிவித்தார்.