மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணீர் விட்டு அழுத யுவராஜ் சிங்! உருக்கமான தகவலை வெளியிட்ட அவரது மனைவி!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர், அதிரடி ஆட்டக்காரர் யார் என்றல் அனைவரும் யுவராஜ் சிங்கை தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்திய அணியில் இவர் மிக முக்கியமான வீரராக இருந்தார்.
2000-ம் ஆண்டில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக அறிமுகமானவர் யுவ்ராஜ் சிங். அதிரடி பேட்டிங்க்கு பெயர் போன இவர், ஒரே ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தார். பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் யுவராஜ் இருந்துள்ளார். இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவதாக அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் யுவராஜ் சிங் ஓய்வு குறித்து பேசிய அவருடைய மனைவி ஹஷெல் கீச் கூறுகையில், 'ஒரு மனைவியாக கிரிக்கெட் பிரிவு பற்றி அவரிடம் என்ன சொல்ல முடியும். அவர் ஓய்வு பெற்றதற்கு எனது முழு ஆதரவை அளித்துள்ளேன். யுவராஜ் சிங்கை பார்ப்பதற்கு முன்பு வரை நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. 2016ஆம் ஆண்டு யுவராஜை மீண்டும் அணிக்காக விளையாடுமாறு இந்திய அணி கிட் அனுப்பியிருந்தது. அதனை பார்த்ததும் அவர் அழ ஆரம்பித்துவிட்டார். ஆனால் அந்த உணர்ச்சியினை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.