எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன குணம் உடையவர்கள் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தெய்வ பக்தி உள்ளவர்கள். முன்னோர்கள் வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள். தன்னம்பிக்கை உடையவர்கள் மற்றும் அன்புக்கு அடிமையானவர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கடவுளிடம் நிறைய வேண்டுதல் வைப்பவர்கள். குறிப்பாக எனக்கு இது செய்தால் உனக்கு இது செய்கிறேன் என வேண்டுதல் வைப்பவர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக கூட இறை வழிபாடு செய்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஒவ்வொரு செயலிலும் இறைவனால் தான் நடந்தது என மனதார நம்புபவர்கள். குறிப்பாக கோவிலில் பக்தர்கள் போடும் கோஷம் மற்றும் மந்திரத்தை கேட்டு மகிழ்ச்சியுடன் இறைவழிபாடு செய்பவர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என இருப்பவர்கள். இவர்கள் புண்ணிய தளங்களுக்கு சென்று நீராட விரும்புபவர்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசை கொண்டவர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை தவறாமல் வழிபடுபவர்கள். குரு உபதேசத்துடன் தெய்வத்தை தனது காதலனாகவோ, நண்பனாகவோ நினைத்து வழிபடுபவர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தாய் தந்தையரை தெய்வமாக வணங்கக் கூடியவர்கள். எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் தெய்வ வழிபாடு செய்வார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கடவுளின் வளாகத்தை சுற்றி வருவதில் ஆர்வம் உள்ளவர்கள். கடவுளின் மூலம் ஆதாயம் பெறுபவர்கள். அதேபோல் கடவுள் குறித்த விஷயத்தை மற்றவருக்கு சொல்லும் குணமுடையவர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று நீராட விரும்புவர்கள். தாயை தெய்வமாக வணங்கக் கூடியவர்கள். அதேபோல் பெண்களை தெய்வமாக வணங்கக் கூடியவர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நான்தான் கடவுள் என்று சொல்லும் அளவிற்கு இருப்பவர்கள். தர்ம முழுக்க நெறியோடு இறைவனை காண மற்றவருக்கு உபதேசம் செய்பவர்கள். இவர்கள் இயற்கை பஞ்சபூதங்களில் கடவுளை காண்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடவுளுக்காக எதையும் செய்பவர்கள். அதேபோல் கடவுள் தான் நினைப்பதை செய்வார் என்று மனதார விரும்புபவர்கள். இறை காரியங்கள் நிறைய செய்பவர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கடவுள் பற்றிய விஷயத்தை மற்றவருக்கு சொல்லும் குணமுடையவர்கள். இறைவன் மூலம் ஆதாயம் பெறுபவர்கள். அதேபோல் புராண இதிகாச கதைகளை கேட்டு மகிழ்ந்தவர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என இருப்பவர்கள். இவர்கள் பொது சேவை மூலம் இறைவனை காண்பார்கள்.