1 மாத குழந்தை தண்ணீர் பேரலில் அமுக்கி கொலை.! புதுக்கோட்டை தாய் விபரீதம்.! 



pudhukottai women killed her 1 month baby

கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ஒரு பெண் தனது ஒரு மாத குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா என்பவர் தன் கணவனை பிரிந்த நிலையில் தனியே வசித்து வந்துள்ளார். அவருக்கு ஒரு மாதத்தில் கை குழந்தை ஒன்று இருந்துள்ளது. குழந்தை சம்பவ தினத்தில் அழுது கொண்டே இருந்தது. அந்த குழந்தையை லாவண்யா அமைதி படுத்த முடியாமல் அவதியுற்றார். 

ஒரு கட்டத்தில் அவருக்கு ஆத்திரம் அதிகரிக்க குழந்தையை சமாதானப்படுத்தாமல் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு சென்று தண்ணீர் பேரலில் அமுக்கி கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: சார், வெறும் ₹.1500 தான்.. உல்லாசத்திற்கு அழைத்து.. போலீஸிடம் சென்று சிக்கிய விஷமிகள் கைது.! 

Pudhukottai

இந்த சம்பவம் பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து லாவண்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் தனியாக வசித்து வந்த லாவண்யா அதிக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. பொதுவாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சரியான தூக்கமின்மை, சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும். 

இந்த காலகட்டத்தில் அவருக்கு மிகவும் அரவணைப்பு தேவை. ஆனால், லாவண்யா தனியாக இருந்து வந்ததால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி தன் குழந்தையை கொல்லும் அளவிற்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: ஆபரேஷன் மூலம் குழந்தை.. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் துடிதுடித்து மரணித்த பெண்.!