மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற தமிழக சிறுமி மயங்கி விழுந்து மரணம்.!
கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த பத்மஸ்ரீ என்ற 12 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது கோயிலுக்கு செல்லும் வழியில் அப்பாச்சி மேடு பகுதியில் சிறுமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சிறுமியை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமிக்கு ஏற்கனவே மூச்சு திணறல் பிரச்சினைகள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.