மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எலி மருந்து கலந்த தண்ணீர் குடித்த 13 வயது சிறுவன் மரணம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன் குடியிருப்பு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகன் விக்னேஷ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்த நிலையில் விக்னேஷ் மாலையில் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து குடத்தில் இருந்த தண்ணீரை குடித்துள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரிடம் விசாரணை செய்ததில் குடத்தில் இருந்த தண்ணீரை குடித்தேன் என கூறியுள்ளார். இதனையடுத்து குடத்தில் இருந்த தண்ணீரை சோதனை செய்து பார்த்ததில் எலி மருந்து கலக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக சிறுவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.