#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துயர சம்பவம்... வீடியோ கேம் விளையாட்டால் விபரீதம்.!! உயிரை மாய்த்துக் கொண்ட 15 வயது சிறுவன்.!!
சென்னையில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 15 வயது மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவரை இழந்த பெண்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள வியாசர்பாடியில் வசித்து வருபவர் நதியா. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் நவீன்(15) மற்றும் மகள் பிரியதர்ஷினி(13) ஆகியோருடன் வசித்து வருகிறார். கணவன் இல்லாததால் இவர் வேலைக்கு சென்று தனது குழந்தைகளை பராமரித்து வந்திருக்கிறார்.
வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையான மகன்
இந்நிலையில் இவரது மகன் நவீன் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மேலும் செல்போனில் வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையான நவீன் எப்போதும் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பலமுறை அவரிடம் எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது குறித்து நதியா பலமுறை நவீனை கண்டித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் கொடுமை... 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! கணித ஆசிரியர் சஸ்பெண்ட்.!!
தூக்கு போட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்றும் நவீன் செல்போனில் வீடியோ கேம் விளையாடி இருக்கிறார். இது தொடர்பாக தாய் மற்றும் மகனிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. நவீன் வீடியோ கேம் விளையாடியது குறித்து நதியா கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவரது மகனான நவீன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கால் மிதியடியில் அமைச்சர் உதயநிதியின் முகம்; தன்னை இழிவுபடுத்தியோருக்கு சாட்டையடி பதில்...!