மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஒரு வருடமாக சில்மிஷம்.! பகீர் தகவல்..!
திருவண்ணாமலை பகுதியில் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு சுமார் ஒரு வருடமாக காலமாக பாலியல் தொல்லை அளித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
திருவண்ணாமலை : வேங்கிக்கால் என்னும் பகுதியில் உள்ள ராணிஅண்ணாதுரை என்னும் நகரில் வசித்து வருபவர் பாஷா. 'அன்புடைமை அறக்கட்டளை' என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை பாஷா நடத்தி வந்துள்ளார்.
இவரது வீட்டின் பக்கத்தில் 16 வயது சிறுமி தனது பெரியம்மா தாமரையுடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த சிறுமிக்கு பாஷா தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட சைல்ட் ஹெல்ப் லைன் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சிறுமிக்கு நடந்த கொடுமையை தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இந்த தகவலை அம்மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெரிவித்து புகார் அளித்துள்ளார்.
அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்த காவல்துறையினர், தகவல் அறிந்து தலைமறைவான பாஷாவை தேடி வந்துள்ளார்கள். இந்நிலையில் இன்று பாஷாவை கையும் களவுமாக பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைந்துள்ளார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி என்றும் பாராமல் பாலியல் தொல்லை அளித்து வந்த அறக்கட்டளை நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிருச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இன்னும் இப்படிப்பட்ட மனித மிருகங்களுக்கிடையே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் வேதனை படுவதா ? இல்லை கொந்தளிப்பதா ?