மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசை வார்த்தை கூறி 17 வயது மாணவி கர்ப்பம்... திருப்பூர் இளைஞர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!
திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற 18 வயதில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(18), இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பலமுறை உல்லாசமாக இருந்திருக்கிறார் செல்வம்.
அந்தப் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படவே அவரது பெற்றோர் அந்த மாணவியிடம் விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது செல்வம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார் அந்த பெண். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சென்று பரிசோதித்துப் பார்த்தபோது 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்து அதிர்ச்சடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வம் மீது புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் செல்வத்தை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுமி கர்ப்பமாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.