மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அக்காள், தங்கை இருவரையும் வீட்டிற்குள் போட்டு பூட்டி சென்ற மூதாட்டி... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
கோவையில் 17 வயது சிறுமி மற்றும் அவரது தங்கை இருவரும் தங்களது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதே பகுதியில் மதபோதகராக இருந்து வந்துள்ளார் ஸ்டீபன் ராஜ். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் வீடு வீடாக சென்று ஜெபம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று 17 வயது சிறுமி மற்றும் அவரது தங்கை இருவரையும் வீட்டிற்குள் விட்டு கதவை தாழிட்டு சென்றுள்ளார் சிறுமியின் பாட்டி. இதனை பார்த்து கொண்டிருந்தார் ஸ்டீபன்.
சிறிது நேரம் கழித்து வீட்டை திறந்து உள்ளே சென்ற ஸ்டீபன் தங்கையை ஒரு அறையில் அடைத்து விட்டு 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அந்த சிறுமி கூச்சலிட்டதை அடுத்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார் மதபோதகர் ஸ்டீபன் ராஜ். பின்னர் சிறுமியின் பாட்டி வீட்டிற்கு வந்தபின் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார் சிறுமி.
இச்சம்பவம் குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதபோதகர் ஸ்டீபன் ராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.