+1 சிறுவனுடன்.. காதல்.. மறைமுக குடித்தனம்.. போக்ஸோவில் கைதான தாய்.. தவிக்கும் 2 பிஞ்சுகள்.!

முறையற்ற காதல்
முறையற்ற காதலால் பல்வேறு குடும்பங்கள் தவித்து வருவதும், குழந்தைகள் அனாதை ஆவதும் பெருகிவிட்டன. அந்த வகையில், சென்னையில் இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவரின் விபரீத ஆசையால் குழந்தைகள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மறைமுக குடித்தனம்
சென்னை அருகே பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணிற்கு சிறு, சிறு வயதில் இரு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த சூழலில் அந்த பெண்ணிற்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் மீது காதல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மாணவனை ஆசை வார்த்தை கூறி அவர் வெளியூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: "புலி நகம் போட்டிருக்கேன்" - யூடியூபருக்கு பெருமையாக பேட்டி கொடுத்து கைதான கோவை தொழிலதிபர்.!
போக்ஸோவில் கைது
இது பற்றி மாணவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் அவர்களை கண்டறிந்து அந்த பெண்ணை கைது செய்தனர். தற்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த பெண் சிக்கிய நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தவிக்கும் பிஞ்சுகள்
இதனால் அவருடைய குழந்தைகள் தற்போது ஆதரவில்லாமல் தவித்து வருகின்றனர். பெண்ணின் இந்த விபரீத ஆசையால் இரு உயிர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டியூசன்ல படிக்கிற பாடமா இது? 22 வயது இளம்பெண்ணுடன்., 15 வயது சிறுவன்.. போக்ஸோவில் பெண் கைது.!