"புலி நகம் போட்டிருக்கேன்" - யூடியூபருக்கு பெருமையாக பேட்டி கொடுத்து கைதான கோவை தொழிலதிபர்.! 



  in Coimbatore Business Man Arrested by Forest Department 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் தொழிலதிபர் பாலகிருஷ்ணன். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியில், அவர் தான் புலி நகம் அணிந்திருப்பதாக கூறினார். 

ஆந்திராவில் விலை கொடுத்து வாங்கியதாக பாலகிருஷ்ணன் கூறவே, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி, வனத்துறையினரின் கவனத்திற்கு சென்றது.

arrested

மான் கொம்பு கைப்பற்றப்பட்டது

இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் பாலகிருஷ்ணனின் வீட்டில் சோதனை நடத்தி மான் கொம்பு ஒன்றை கைப்பற்றினர். மேலும், அவரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: பிரியாணியில் பூச்சி?.. இன்ஸ்டாகிராமில் வீடியோ ரிலீஸ் செய்த இளைஞர்.. சிசிடிவியில் ஷாக் உண்மை.! 

யூடியூப் பக்கத்திற்கு பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி, அவரை கைது வரை கொண்டு சென்று விட்டுள்ளது, சமூக வலைதளத்தில் பேசும் நபர்கள் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

இதையும் படிங்க: இன்று இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.! 5 மாவட்டங்களுக்கு அலெர்ட்.!