அடேங்கப்பா.. 5 வயதில் இப்படியொரு திறமையா! உலக சாதனை படைத்த சென்னை சிறுமி! குவியும் பாராட்டுக்கள்!!
சென்னையை சேர்ந்த பிரபு மற்றும் கௌசல்யா தம்பதிகளின் மகள் கோதை வாஹ்ருணி. அவர் தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாராம். சிறுவயது முதலே மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த கோதை புதிர் போடுவது, கணக்கு போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கி வந்துள்ளார். மேலும் ஐந்து வயதிலேயே சுடோகு விளையாட்டுகளை சுலபமாக செய்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் ரூபிக் கனசதுர புதிர்
விளையாட்டை சிறுமியின் பெற்றோர் அவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில் மிகுந்த ஆர்வம் கொண்ட கோதை யூடியூப் மூலம் நன்கு கற்று தேர்ந்துள்ளார். பல வண்ணங்களில் இருக்கும் ரூபிக் கனசதுரத்தை மிகவும் அசால்ட்டாக வரிசைப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார்.
இவர் ஹூலா ஹூபிங் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டே டெட்ராஹெட்ரான் என்ற முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை 6.88 நொடிக்குள் வரிசைப்படுத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.அதன் மூலம் அவர் 18 வயது வாலிபர் 13.86 நொடியில் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் கோதை மாஸ்டர்மார்பிக்ஸ் எனப்படும் மிகவும் கடினமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை ஹூலா ஹூபிங் செய்துகொண்டே 1 நிமிடம் 59 நொடிக்குள் செய்து முடித்துள்ளார். மெகாமின்க்ஸ் எனப்படும் 8 பக்க கனசதுரத்தை 3.3 நிமிடத்தில் செய்துமுடித்து இரு உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். சிறு குழந்தையின் இந்த திறமையை பெருமைபடுத்தும் விதமாக தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது.