ஒலிம்பிக் மட்டுமே எனது லட்சியம்... சாதிக்கத் துடிக்கும் அரசு கல்லூரி மாணவி..!



A government college student said her ambition is to participate in the Olympics

தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரத்தில் தற்போதைய காலகட்டத்தில் விளையாட்டு வீரர்களின் ஆதிக்கம் முக்கிய அங்கமாக மாறி வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி - கவிதா தம்பதியினர். இவர்களுக்கு 21 வயதில் வர்ஷினி என்ற மகள் உள்ளார். ராஜபாண்டி ஓட்டல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் இவரது மனைவி கவிதா டிவிஎஸ் டயர் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து வர்ஷினி மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். குத்துச்சண்டை வீராங்கனையான வர்ஷினி சமீபத்தில் டெல்லியில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று போட்டியில் வெற்றி கண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

boxing

ஒரு சாதாரண கூலி தொழிலாளியின் மகள் சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற செய்தியை அறிந்த கிராம மக்கள் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சொந்த ஊர் திரும்பிய வர்ஷினிக்கு மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் வானதி தலைமையில் பேராசிரியர்களும், சக மாணவிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பை கண்டு மகிழ்ச்சியடைந்த வர்ஷினி கூறியதாவது இப்படிப்பட்ட வரவேற்பும், உற்சாகமும் தன்னை மேலும் வளர்த்துக் கொண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ப்பதற்க்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே எனது லட்சியம் என்று வர்ஷினி கூறியுள்ளார்.