போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!



a-man-surrendered-to-police-for-killing-his-son-in-into

கோவில்பட்டி அருகே கஞ்சா போதையில் தந்தையே மகனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சரணடைந்த தந்தையிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்றாக மது அருந்தியதில் தகராறு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தேனுகால் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதன்(82). இவரது மகனான பாலமுருகனுக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தந்தையும், மகனும் சேர்ந்து மது அருந்தி இருக்கின்றனர். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சமாதானமாகி உறங்கச் சென்றுள்ளனர்.

tamilnadu

மகன் வெட்டி படுகொலை

தன்னுடன் மகன் சண்டையிட்டதால் ஆத்திரத்திலிருந்த பிரியதன் அதிகாலையிலேயே கஞ்சா புகைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து போதையின் உச்சத்திலிருந்த அவர் தனது மகனை மண்வெட்டியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இதன் பிறகு காவல் நிலையம் சென்ற பிரியாதன் நடந்தவற்றை கூறி போலீசிடம் சரணடைந்தார். 

இதையும் படிங்க: மச்சினியை வீடியோ எடுத்த மச்சான்... செல்போன் முழுவதும் குளியல் வீடியோக்கள்.!! விசாரணையில் அதிர்ச்சி.!!

கைது செய்து விசாரணை

இதனையடுத்து பிரியதனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பாலமுருகன் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக பிரியதனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கஞ்சா போதையில் தந்தையே, மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: "அம்மாவ தப்பா பேசுவியா நீ..' 75 வயது முதியவர் கொடூர கொலை.!! பரபரப்பு பின்னணி.!!