தலைகீழாகத்தான் இறங்குவேன்.. பனைமரத்தில் ஆட்டுக்குட்டியின் மாஸ் சம்பவம்..!
ஆடுகள் பொதுவாக மலைக்குன்றாக இருந்தாலும் சரி, மரமாக இருந்தாலும் சரி அதில் எளிதில் ஏறிவிடும் தன்மை கொண்டவை. அந்தந்த பகுதிகளில் எப்படி ஏற வேண்டும் என்ற செயல்பாடு, இயற்கையாகவே அதற்கு கற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறு மலை குன்றுகளில், ஆபத்தான இடங்களில் இளம் ஆட்டுக்குட்டிகள் ஏறிவிடும். ஏனெனில் அவையின் எடை குறைவு.
பின்னாளில், அவை வளர்ந்து அதன் உடல் எடை அதிகரிக்கும் போது சில இடங்களில் அதனால் ஏற இயலாது. அதன் உடல் எடை மற்றும் புவியின் மையநோக்கு விசை அதனை கீழே சாய்க்க அதிகளவு வாய்ப்புள்ளது.
Click here to Watch Video: https://www.facebook.com/100014996163862/videos/646508873135395/
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில், "இயற்பியல் விதி என்பது இயந்திரத்திற்கு மட்டும் தான்., ஆடுகளுக்கு அல்ல.. இந்த ஆடு பனைமரத்தில் எவ்வாறு இறங்குகிறது பாருங்கள்" என்று வைரலாகி வருகிறது. காண்போரை ஆச்சர்யமூட்டும் வகையில் வைரலாகும் வீடியோ உங்களுக்காக மேலே இணைக்கப்பட்டுள்ளது.