#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தந்தை, அக்காவை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த வாலிபர்... மாங்காடு பகுதியில் பயங்கரம்...!!
தந்தையையும், சகோதரியையும் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை அடுத்த மாங்காடு, அடிசன் நகர், ராகவேந்திரா தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தவர் செல்வராஜ் (65). இவர் மியூசிக் டீச்சராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி (55). இவர்களது மகன்கள் ராஜேஷ் பிராங்கோ (40), பிரகாஷ் (32), மகள் பிரியா (38).
தமிழ் சினிமா துறையில் சாந்தி துணை நடிகையாக உள்ளார். மகன் ராஜேஷ், மனைவியுடன் படப்பையில் வசித்து வருகிறார். மகள் பிரியா, கணவருடன் மாங்காடு, பாலாஜி நகரில் வசித்து வந்தார். கடைசி மகன் பிரகாஷ், பெற்றோருடன் வசித்து வந்தார்.
பிரகாஷ், சினிமா துறையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை பிரகாஷ் பிரியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது அக்காவுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரியா அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால், பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரது தாய் சாந்தி மற்றும் அண்ணன் ராஜேஷூக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது தந்தை செல்வராஜை அங்கு இல்லாததை கண்டு திடுக்கிட்டனர். இந்நிலையில் அவர் எங்கு சென்றிருப்பார் என்று தங்கியிருந்த வீட்டில் ஒவ்வொரு அறைகளாக தேடி பார்த்தனர்.
அப் போது, படுக்கை அறையில் செல்வராஜ் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், செல்வராஜ் மற்றும் பிரியாவின் உடல்களை மீட்டு, உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், தலைமறைவான பிரகாஷை தேடி வந்தனர். அப்போது பிரகாஷ் அதே பகுதியில் சுற்றித் திரிவதை கண்டறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், பிரகாஷ் சினிமா துறையில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலை செய்து வந்ததுள்ளார் என்பதும், குடிப்பழக்கம் காரணமாக சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதற்காக பிரகாஷுக்கு கடந்த வருடம் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், மருத்துவ செலவு அதிகமான காரணத்தால் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் அவரது பெற்றோரிடமும், அக்காவிடமும் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தனது வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் பக்கத்தில் இருந்த அக்கா வீட்டிற்கு சென்று, அவரிடமும் தகராறு செய்துள்ளார். அப்போது அவரையும் அவரையும், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அவரது தாய் சாந்தி பிரகாஷ் இருக்கு மாத்திரை வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த கொலைக்கு அவர் மனநிலை பாதிக்கப்பட்டது காரணமா அல்லது சொத்து தகராறு போன்ற வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.