மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடித்துவிட்டு தொல்லை செய்த கணவன்.! மிளகாய் பொடியை தூவி அறிவாளால் ஒரே போடு போட்ட மனைவி..
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள ராயவேலூரைச் சேர்ந்த கூலித்தொழிலார்களான சண்முகவேல் மற்றும் அழகுசின்னு இருவரும் கணவன், மனைவி ஆவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சண்முகவேல் தினமும் இரவு குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ள நிலையில், அழகுசின்னு தன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். அங்கே சண்முகவேல் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார்.
சிறிது நாட்கள் அமைதியாக இருந்த சண்முகவேல், மீண்டும் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்து தகராறு செய்யவும், ஆத்திரமடைந்த அழகுசின்னு வீட்டிலிருந்த மிளகாய் பொடியை எடுத்து சண்முகவேல் முகத்தில் தூவியுள்ளார்.
பின்னர், அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சண்முகவேல் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், அழகுசின்னு தானாகவே போலீசில் சென்று சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.