மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்... மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வழக்கறிஞர் கைது.!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை என்கிற ஊரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தெருவில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை அழைத்து உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள புதரில் வைத்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அப்பகுதி வழியாக சென்ற இளைஞர் ஒருவர் பார்த்து வழக்கறிஞரிடமிருந்து அந்த குழந்தையை காப்பாற்றி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் நடந்த சம்பவங்களையும் சிறுமியின் பெற்றோரிடம் விவரித்து இருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வழக்கறிஞருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை வழக்கறிஞர் ராஜாவை கைது செய்து அவரை விசாரித்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. மேலும் வழக்கறிஞரிடம் இருந்து உரிய நேரத்தில் சிறுமியை காப்பாற்றி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த இளைஞர் ராஜாவுக்கு மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் பாராட்டும் பரிசும் வழங்கினார்.