திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
40 வயது பெண்ணிடம் அத்துமீற முயற்சி; இளைஞருக்கு மாவுக்கட்டு.. சென்னையில் பகீர் சம்பவம்.!
சென்னையில் உள்ள கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் பகுதியில் 40 வயதுடைய பெண்மணி கணவருடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் பேப்பர் போடும் வேலை செய்து வந்த நிலையில், காலை 04:30 மணியளவில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
பின் காலை 05:30 மணியளவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்ட நிலையில், கணவர் வந்துவிட்டார் என பெண் கதவை திறந்துள்ளார். இதனிடையே, வீட்டின் வாசலில் இருந்த மர்ம நபர், பெண்ணிடம் அத்துமீற முயற்சித்துள்ளார். பதறிப்போன பெண்மணி இளைஞனின் கைகளை கடித்து அலறி இருக்கிறார்.
பெண் பலாத்கார முயற்சி
இதனால் அக்கம் பக்கத்தினர் விரைந்த நிலையில், இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். பின் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த மனைவியை பிரிந்த பார்த்தீபன் என்பவன் இச்செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
இதையும் படிங்க: மார்பிங் போட்டோ மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை; இளைஞர் காந்திஜி கைது.!
இதனையடுத்து, பார்த்தீபனை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர். மேலும், கைதின்போது பார்த்தீபன் தப்பி ஓடி கீழே விழுந்து வலது கைகளை முறித்துக்கொண்டார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: #Breaking: 29 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!