திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
14 வயது சிறுமியை எட்டு மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது இளைஞன்; ஆசையாக பேசி மோசம் செய்த துயரம்.!
சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். எம்.பி.கே நகரை சேர்ந்த மாணவர், தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப்போட்டி நிகழ்வின்போது, மாணவன் - மாணவி இடையே பழக்கம் ஏற்பட்டு நட்பாக பேசி வந்துள்ளனர். இவர்களின் நட்பு பின்னாளில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவனால் காதலாக மலரவிடப்பட்டுள்ளது.
மாணவியை காதல் வலையில் வீழ்த்திய மாணவன், எப்போதும் அவரை தனியாக அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளான். இந்நிலையில், மாணவரின் நண்பர் தனியாக அறையெடுத்து தங்கி இருந்துள்ளார்.
அங்கு சிறுமியை காதலின் பெயரில் 2022 ஆகஸ்ட் மாதம் அழைத்து சென்றவன், காதல் பெயரை சொல்லி பலாத்காரம் செய்துள்ளான். பின் பிப்ரவரி 2023-லும் இச்செயல் நடந்துள்ளது.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் மாணவன் கல்லூரியில் படிக்கச் சென்றுவிட, மாணவியின் உடல்நலனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாய் எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பது உறுதியானது. விசாரணை செய்தபோது 12ம் வகுப்பு மாணவனின் செயல் தெரியவரவே, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாக, மாணவனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.