திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பட்டப்பகலில் பயங்கரம்.. சந்தையில் கணவன் படுகொலை.. மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு.!
சென்னையில் உள்ள கொடுங்கையூர், எருக்கஞ்சேரியை சேர்ந்தவர் கோபி (வயது 51). இவரின் மனைவி லதா (வயது 45). தம்பதிகள் இருவரும் கொடுங்கையூர் முத்தமிழ்நகர் சந்தை பகுதியில் சாலையோரம் காய்கறி கடை மற்றும் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
இதே பகுதியில் சாலையோரம் ஆனந்த் மற்றும் அவரின் சகோதரர் அரவிந்த் என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும், கோபி - லதா தம்பதிகளுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த தகராறில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ஆனந்த் - அரவிந்த், தங்களின் 3 நண்பர்களுடன் சேர்ந்து கோபியை பயங்கர ஆயுதத்தால் வெட்டி இருக்கின்றனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தது கணவரை காப்பாற்ற சென்ற லதாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த கோபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், லதா உயிருக்கு போராடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கொடுங்கையூர் காவல் துறையினர், லதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆனந்த், அரவிந்த் மற்றும் அவர்களின் 3 நண்பர்களை தேடி வருகின்றனர்.