திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை; அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்த சிறுமியின் பகீர் தகவல்.!
சென்னையில் உள்ள கொடுங்கையூர், காந்தி நகரில் 14 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அப்பகுதியை சேர்த்த இளைஞர் பிரசாந்த் (வயது 27).
பிரசாந்த் சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி, அவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
இதனால் சிறுமி இதுகுறித்து வெளியே கூறாமல் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, சிறுமி குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார்.
இதன்பின் மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது பிரசாந்தின் அதிர்ச்சி செயல் அம்பலமானது.
இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.