மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போனை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த கண்டித்ததால் விபரீதம்.. தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
எந்த நேரமும் செல்போனை பார்த்தபடி இருந்த மகளை பெற்றோர் கண்டிக்க, மனமுடைந்த 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர், எழிலகத்தில் சர்வே அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி உஷா. தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் வருடம் பயின்று வரும் நிலையில், இரண்டாவது மகள் தீபிகா (16), தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், தீபிகா தினமும் இரவில் நீண்ட நேரம் செல்போன் பார்த்துக்கொண்டு இருப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனைகவனித்த பெற்றோர் தீபிகாவை கண்டித்து இருக்கின்றனர். மேலும், படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியுள்ளனர். இதனைகண்டுகொள்ளாத தீபிகா, தொடர்ந்து அலைபேசியை உபயோகம் செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து, தீபிகாவை பெற்றோர் நேற்று கடுமையாக கண்டிக்கவே, மனமுடடைந்துபோனவர் பள்ளிக்கு செல்லாமல் இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று வீட்டில் உள்ள தனது அறையில் இருந்த தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மகளை மதிய உணவு எடுத்துக்கொள்ள தாய் அழைக்கச்சென்றபோது, அவரின் அறை பூட்டி இருந்துள்ளது.
மேலும், நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் பதறிப்போன உஷா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, தீபிகா புடவையால் தூக்கில் தொங்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக கொடுங்கையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.