மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பன்றி திருடியதாக 17 வயது சிறுவன் கடப்பாரையால் அடித்து கொலை: சென்னையில் பயங்கரம்.!
சென்னையில் உள்ள மணலி, சின்ன மாத்தூர், ஜெயலட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சங்கர். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சங்கரின் மனைவி தேவி. தம்பதிகளுக்கு 17 வயதுடைய சஞ்சய் என்ற மகன் இருக்கிறார்.
இவர்களின் உறவினர்கள் தர்மா (வயது 27), பாபு (வயது 24). இவர்கள் மணலி எட்டியப்பன் தெருவில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இவர்கள் சஞ்சயின் வீட்டிற்கு வந்து, சஞ்சய் மற்றும் அவரது நண்பர் தில்லி ஆகியோரை தாக்கி தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த தேவி, தனது மகனை உறவினர்கள் கடத்திச்சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் விசாரணையை தொடங்கியும் இருக்கின்றனர். சஞ்சயின் நண்பர் டில்லியை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, பன்றி மேய்த்து வரும் தர்மா, பாபு ஆகியோரின் 3 பன்றிகளை சஞ்சய் மற்றும் டில்லி திருடியதாக இருவரும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தர்மாவின் வீட்டில் வைத்து கடப்பாரையால் தாக்குதல் நடந்த நிலையில், சஞ்சய் மயங்கி இருக்கிறார்.
இதனால் அவர் இறந்துவிட்டதாக எண்ணி சாக்கு மூட்டையில் சஞ்சயை ஏற்றிக்கொண்டு ஆட்டோவை எடுத்து சென்றுள்ளனர். இருவரும் சம்பவத்திற்கு பின்னர் மாயமான நிலையில், சஞ்சயின் உடல் ஹரிகிருஷ்ணாபுரம் சுடுகாடு பகுதியில் உள்ள ஆற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
சஞ்சய் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொலையாளிகள் இரண்டு பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.