மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறார் ஆபாச படங்கள் ரூ.100, ரூ.150 க்கு விற்பனை; சென்னை இளைஞர் கைது.!
ரூ.100 மற்றும் ரூ.150 க்கு நூற்றுக்கணக்கான சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், டெலக்ராம் செயலியின் வாயிலாக சிறார்கள் ஆபாச படங்கள் விற்பனை செய்யப்படுகிறது என ஆவடி காவல் ஆணையராக குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார் பெறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
சம்பந்தப்பட்ட டெலகிராம் பக்கத்தை கண்டறிந்து ஆய்வு செய்த அதிகாரிகள், அதில் விடீயோக்களை விற்பனை செய்த இளைஞரை அடையாளம் கண்டு சென்னை மணலி, சின்னசேக்காடு பகுதியில் அசித்து வரும் பிரசாந்த் என்ற இளைஞரை கைது செய்தனர்.
சிறார்களின் ஆபாச வீடியோ
இவரிடம் நடந்த விசாரணையில், பிரசாந்த் சிறார் ஆபாச படங்களை டெலகிராம் பக்கத்தின் வாயிலாக விற்பனை செய்தது அம்பலமானது. அதாவது, 100 சிறார்களின் ஆபாச படங்களை ரூ.100 க்கும், 250 விடீயோக்களை ரூ.150 க்கும் விற்பனை செய்துள்ளார் என்பது அம்பலமானது.
விசாரணையை தொடர்ந்து பிரசாந்தை கைது செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். தற்போது பிரசாந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: துயர சம்பவம்... வீடியோ கேம் விளையாட்டால் விபரீதம்.!! உயிரை மாய்த்துக் கொண்ட 15 வயது சிறுவன்.!!