#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி மாணவன் கைது.. வாட்ஸப்பில் அதிர்ச்சி சேட்டிங்.!
மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள மாங்காடு பகுதியை சார்ந்த பள்ளி மாணவி, 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் பாலியல் தொல்லை காரணமாக 3 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டார். மேலும், தனது தற்கொலை கடிதத்தில், "இந்த உலகத்தில் யாரையும் நம்ப முடியவில்லை. எனக்கு ஆறுதல் கூற கூட யாரும் இல்லை.
உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரும் நல்லவர்கள் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தாயின் கருவறையும், கல்லறையும் தான். கடவுள் ஏன்தான் என்னை படைத்தாரோ? இத்தனை கொடூரம் நடக்கும் உலகம் எதற்கு?. எனக்கு நியாயம் வேண்டும்" என்று கண்ணீருடன் தனது மன உருக்கத்தினை வெளிப்படுத்தி இருந்தார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு விசாரணையில், கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவியிடம் வாட்ஸப்பில் ஆபாசமாக பேசியது உறுதியானது. விக்னேஷின் மீது போக்ஸோ, பாலியல் பலாத்காரம், தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.